;

பாடல்கள்

Friday, July 31, 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!

நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும ் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம் ? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும ் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

JAWATAN KOSONG DALAM PERKHIDMATAN AWAM AM PERSEKETUAN

Warganegara Malaysia yang berkelayakan adalah dipelawa memohon jawatan-jawatan kosong dalam Perkhidmatan Awam Am Persekutuan, Perkhidmatan Awam Bersama yang am bagi Persekutuan dan Perkhidmatan Awam Negeri Melaka, Pulau Pinang, Negeri Sembilan dan Perlis menggunakan Borang Permohonan Online (SPA8i) yang disediakan di sebelah kiri laman ini.


Permohonan boleh dibuat sepanjang masa sama ada melalui Portal SPA atau Portal JobsMalaysia. Walaubagaimanapun permohonan terkini akan membatalkan permohonan terdahulu dan bilangan jawatan yang boleh dipohon adalah maksimum 5 jawatan.


Sila mohon jawatan mengikut kelayakan akademik anda.


Apply nw...... www.spa.gov.my

Monday, July 20, 2009

தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழவின் தொகுப்பு செய்தி & ஒளிப்படம்

தலை நகரில் தமிழுக்கு திருவிழா சூலை திங்கள் 21ம் தேதி,தோட்ட மாளிகையில் மலேசியத் தமிழிலக்கியக் கழகமும் தமிழக தேவநேய பாவாணர் தமிழ் அரக்கட்டலையும் இணைந்து நடாத்தி வருகின்ற தமிழியல் பட்டயக் கல்வியில் மூன்று ஆண்டுகள் முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2009) பட்டயங்கள் அளிக்கப்பட்டன.காஞ்சி பச்சையப்பன் கல்லுரியின் முன்னாள் முதல்வர் மு.பி.பா.பாலசுப்பிரமணியம், பாவாணர் அறக்கட்டளை தலைவர் தமிழியப் பாவலர் கதிர் முத்தையனார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இது 7வது பட்டமளிப்பு விழாவாகும்.இதில்,காஞ்சி பச்சையப்பன் கல்லுரியின் முன்னாள் முதல்வர் மு.பி.பா.பாலசுப்பிரமணியம், பாவாணர் அறக்கட்டளை தலைவர் தமிழியப் பாவலர் கதிர் முத்தையனார் ஆகியோர் முன்னிலையில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் முன்நாள் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரனிடமிருந்து மாணவர்கள் பட்டயங்களை பெற்றுக் கொண்டனர்.

ஒளிப்படங்கள்
தமிழ் இலக்கிய கலகத்தின் சின்னம்


திரு.ரே.சு.முத்தையா

திரு ந.சீராளன்

நிறைமலி வணித்தா


செமினி காசங்கு நடுவ 2007ஆம் ஆண்டு மாணவர்கள்
நிறைமலி மரினாதேவி சன்முகம்
&
நிறைமலி பரமெ
சுவரி பரமசிவம்கம்பார் கனிமொழிதமிழ் மறையாம் திருக்குறள்

ஒளிப்படங்கள் அவப்பொது உள்ளிடப்படும்.
ஆக அவப்போது சரி பார்க்கவும்

Friday, July 17, 2009

தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா 19/07/2009 அனைவரும் வர வேண்டிய நிகழ்வு

நாள்/DATE : திருவள்ளுவர் தமிழாண்டு 2040,
கடகம் 3 ஞாயிற்றுக்கிழமை
19.07.2009 SUNDAY

காலம்/TIME : காலை 8.00 முதல் சாயுங்காலம் 7.00 வரை
FROM 8.00am TO 7.00 pm

இடம்/VENUE : தோட்ட மாளிகை, பெட்டலிங் செயா
NUPW HALL,PJ


தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா எதிவரும் ௨0௪0 கடகத் திங்கள் 3 ஆம் பக்கல் ( ஆங்கிலம் 19.07.09 ஆம் நாள் ) இலக்கிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. தமிழ் மறைச் செம்மலும் தமிழ் அறிஞருமாகிய மு. மணிவெள்ளையனனார் அவர்களின் அரிய முயற்சியில் பல ஆண்டுகளாக தமிழ் அறிவும் உணர்வும் மிக்க தமிழர்களை உருவாக்கும் நோக்கில் தமிழியல் புலவர் பட்டத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியே பட்டமளிப்பு விழாவாகும்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெருவொர்கள்:-

முதல் அங்கம்
சென்னை பல்கலைக் கலகத்தில் தமிழியல் துரையில்
இளங்கலை பட்டம் பெருந்நோர் (B.Lit)
பட்டம் பெருவொர்கள்:-
1.தமிழ் புனல் மு.மணிவெள்ளையனார்
2.தமிழ்திரு போகையா முணியாண்டி
3.தமிழ்திரு பொன்முகம்
4.தமிழ்திரு ஆ.ராமன்
5.தமிழ்திரு ந.பொன்னுசாமி

இரண்டாம் அங்கம்

தமிழியல் பட்டைய சான்றிதல்
2007 ஆம் ஆண்டுக்கான
பட்டம் பெருவொர்கள்:-

1.காந்திமதி கன்னியப்பலா
2.சுப்பிரமணியம் முத்தையா
3.சரளா தேவி ராமசாமி
4.விமலா வீரப்பன்
5.சரிதா கிருட்னன் குட்டி
6.கலைவானி முருகன்
7.பூங்கோன முனுசமி
8.நிறைமலி மரினாதேவி சன்முகம்
9.நிறைமலி பரமெசுவரி பரமசிவம்
10.நிறைமலி சுந்தரி கன்னப்பன்
11.திரு சீராளன் நடராஜன்
12.சொக்கநாதன் கருப்பன்
13.பத்மநாதன் கருப்பன்
14.வரலட்சுமி கோவிந்தராசு
15.லெட்சுமி பழனியப்பன்
16.வைரப் பெருமாள் ராசலிங்கம்
17.கலைமனி கணண்
18.செயந்தி அன்னைகிளி
19.செயபிரத அம்மாசி
20.அமுதவள்ளி வரதன்
21.சாந்தி கனேசன்
22.சோதி சுப்பிரமணியம்
23.சாந்தி காத்தமுத்து
24.செலசுதின் பதிநாதன் சௌரிமுத்து
25.சந்தனதாசு ராபட்
26.ராமலிங்கம் அல்லிமுத்து
27.மாரியப்பன் சுப்பிரமனியம்
28.கிரிட்டினன் பருசுராமன்
29.லலிதா கிரிட்டினன்
30.மேரி பெரிய நாயகம்
31.ரானி மங்கம்மா சொக்கலிங்கம்
32.சந்தனா சின்னப்பன்
33.ஒளிவியா சின்னப்பன்
34.அன்னைச்செல்வி பிச்சை பிள்ளை
35.சரவனேசுவரி சுப்பிரமணியம்
36.சாந்தி கனேசன்
37.சரச்வதி நெங்கசாமி
38.நிறைமலி தர்மாம்மாள் பழனிவேலு
39.சுகுனா மாரியப்பன்

2008 ஆம் அண்டு்க்கான
பட்டம் பெருவொர்கள்:-

1.வீரப்பன் வீரசாமி
2.மகேசுவரி வெங்கட்ராம்
3.வனிதா தங்கவேலு
4.பத்மா முனுசாமி
5.மோகன சுந்தரி கனேசன்
6.நாகேசுவரி படவிட்டான்
7.சகுந்தலா சகாதேவன்
8.லெட்சுமி ராமூர்த்தி
9.பரமெசுவரி செல்லபபன்
10.கோவிந்தசாமி அப்பு (கலைமாரன்)
11.செயந்தி ஆருமுகம்
12.அருள் செல்வி மதுரவீரன்
13.பரஞ்சோதி முத்துசாமி
14.பச்சையம்மாள் முனியாண்டி
15.அல மேலு கந்தசாமி
16.மாலதி நாரயனன்
17.சித்திரைச்செல்வி உருத்தரபதி
18.செல்வராணி மாணிக்கம்
19.நித்தியவானி விரராகு
20.செமிந்தா வானிசா மாரன்
21.முத்தைய ரே.சுந்தரம்
22.உ நக்கிரன் சுப்பிரமணியமன்
23.சங்கர லிங்கம் பொன்னையா
24.உமா மகெசுவரி சுப்பிரமணியம்
25.பத்துமாசினி மாணிக்க ரெத்தினம்
26.நீலா கந்தான்
27.துளசி உருத்திராபதி
28.சாமளா காலாசம்

உங்கள் வரவு நல்வரவாகுக


நன்றி வணக்கம்

Thursday, July 16, 2009

பாவேந்தரின் குடும்ப விளக்கு இலக்கிய அரங்கம் தமிழியல் பட்டமளிப்பு விழா-19.07.2009

செந்தமிழ்ச் சுற்றத்தீர்,வணக்கம்.வாழிய நலனே. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்துள்ள 'குடும்ப விளக்கு இலக்கிய அரங்கம்' தமிழியல் (தமிழ்மணிப்) பட்டயத் தேர்வின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வரவு நல்வரவாகுகநாள்/DATE : திருவள்ளுவர் தமிழாண்டு 2040,
கடகம் 3 ஞாயிற்றுக்கிழமை
19.07.2009 SUNDAY

காலம்/TIME : காலை 8.00 முதல் காலை மணி 11.00 வரை
FROM 8.00a.m TO 11.00a.m

இடம்/VENUE : தோட்ட மாளிகை, பெட்டலிங் செயா
NUPW HALL,PJ

கடவுள் நிலையில் மாந்தரின் அறிவும் அறியாமையும்தமிழ் நெறி ஞாயிறு அமரர் பாவலர் திருமாலனார்மதக் கொள்கையினர் : கடவுள் உண்டு என்று உணர்தற்கியலாமல் வெறும் நம்பிக்கையைக் கொண்டு அத்தன்மைக்கு உருவம், குணம் , செயல் என்பதாகக் கற்பித்துக் கொண்டு மாந்த வாழ்வே இறைமையின் இயங்கு - இயக்க நிலையாக உள்ளதைத தங்கள் அறியாமையால் தமது இயக்க உணர்வையே உணர முடியாத நிலையில் எண்ணற்ற இன மொழி நாடு கலைப் பண்பாடு போன்ற வேற்றுமைகளைக் கொண்டு அதனை உணரத தக்க நிலையினின்று முற்றாக முரணிய கருத்துகளால் அவர்கள் செய்கின்ற இறைவழிப்பாட்டால் கடவுள் என்பதை உண்மையிலேயே உணராதக் கரணியத்தால் இறை இல்லை என்றாக்குவதே மதக் கொள்கையினரின் செயலாக உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் உண்டு என்னும் நம்பிக்கையே ஆத்திகம் என்று நம்பி இறைமையை இல்லாமல் ஆக்குகின்றனர். அதாவது இவர்களின் கடவுள் நம்பிக்கையில் அறிவு சான்ற மெய்யுணர்விற்குச சற்றும் இடமின்மையால் இல்லை என்று கூறுவோர்க்கு அடிப்படை ஆக்கம் தருகின்றவர்களாக மத நம்பிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். உண்மையில் அகத்திலும் புறத்திலும் இவர்களே நாத்திகர்களாக இருக்கின்றனர்.


அறிவியலாளர்கள் : மேற்கண்ட மதக் கொள்கையினர்தம் அறியாமைத் தன்மையைத தங்களின் அறிவால் மட்டும் ஆய்ந்து பார்த்து அவை பொய்யானவை என்று தெளிந்து மெய்யுணர்வுப் பெறாதக் கரணியத்தால் மதக் கொள்கையினரால் கற்பனையாகக் கொள்ளப் பெற்ற கடவுள்களை இல்லை என்று சொல்வதையும் அதனால் இவர்கள் மதக் கொள்கையினருக்கு எதிர்புறமாக நிறுத்தப் பெற்று மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது அவர்கள் கூறும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதலால் அவ்வாறு அழைக்கப் பெறுகின்றனர்.
இவ்வறிவியல் கொள்கையாளர்கள் எதிலுமே முற்றாக நிலைத்து நிற்கும் நம்பிக்கையற்றக் கரணியத்தால் அதாவது உண்மை எது எப்படி என்ன என்பதைக் காண வேண்டும் என்ற அறிவின் இடையறா உந்துதலால் முயன்றும் அதற்கு முடிவு காண முடியாமற் போகும் போது கடவுள் இல்லை என்று கூறுவதையும் (அதாவது மதக் கொள்கையினர் கூறும் கடவுளை )அதனால் இவர்கள் மதக் கொள்கையினர்க்கு எதிர்ப்புறமாக நிற்பதையும் அம்மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது கடவுள் என்பதாக அவர்கள் கூறும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர்.
இவர்கள் எதிலுமே முற்றாக தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாதக் கரணியத்தால் மாந்த வாழ்வின் கட்டுப்பாட்டையும் மீறிய இன, மொழி , கலை, பண்பாடு போன்ற மாந்த நிலைகளில் நம்பிக்கையற்று ஆனாலும் உண்மையான நெறி வழிகளில் தங்களை மனத்தை அடக்கி உலகியல் நிலைக்கே பொதுமையானக் கருத்துகளைத் தருகின்றவர்களாக இவர்கள் தங்களுக்குள் இயங்கும் இறைமை அல்லது கடவுள் உண்டு என்பதற்குச் சான்றாக விளங்குகின்றனர். இவர்களை நாத்திகர்கள் என்று கூறுபவர் கடவுள் நிலையை உணர்ந்ததாகப் பொய்யாகக் கருதிக் கொண்டிருக்கும் மதக் கொள்கையினர் ஆவர். உண்மையில் உலகியல் வாழ்வு நிலையைப் பொதுமையானதாக்கும் இவர்களே உண்மையான ஆத்திகர்கள்.
சமயம் (அல்லது) மெய்யுணர்வாளர்கள் : மேற்கண்ட இரு கூறுபாடுகளையும் தமக்குள் தாமே உய்த்துணர்ந்து புறப்பாடும் அகப்பாடும் தாமாகவே இருப்பதைக் கண்டுணர்ந்து அதுவே கடவுள் நிலை அதாவது தாமே அனைத்துமாக இருப்பதைக் கண்டுணரும் மீமிசை நிலைக்குக் கடத்துகின்ற இயக்கமே கடவுள் நிலை என்பதை அறிவும் உணர்வும் அளவோடு கலந்து தாமே உலகும் மற்றவையும் என்றும் உலகும் பிறவும் தாமே என்பதாகவும் உணரப் பெற்று வாழ்வியல் நிலை கடந்து தாமே வாழ்வாக இருப்பதை உணர்ந்து பக்குவமடைதலால் சமயம் என்பதாக உணர்ந்தவர்கள் ; இவர்கள்தாம் மெய்யுணர்வாளர்கள். இம் மெய்யுணர்வால் மேற்கண்ட இரு திறத்தினரையும் விட்டு விலகி நிற்கும் விளக்கமாக விளங்குபவர்கள். இறைமை என்பது என்றோ அன்றே இவர்களும்.
காலம், இடம் சூழ்வினைகளைக் கடந்து நிற்பவர் இவர்களாதலால் இவர்களைத்தான் அதாவது இவர்களின் இயக்க நிலைகளே கடவுள் என்பதாக உணரப் பெறும். இம் மெய்மம் தமிழர்தம் பெற்றியர் சமயத்தில் இறைமை , உயிர், தளை, என்பதாக உணரப் பெறுகின்றது. இதில் தளை என்பது மதக் கொள்கையினரின் அடிப்படையாக உள்ள உலகியல் நிலை. உயிர் என்பது உலகியல் நிலைக்கு அடிப்படையாகி விளங்கும் பரத்துவ நிலை. இறைமை என்பது உலகியல் நிலையையும் அதற்கு அடிப்படையாக விளங்கும் பரத்துவமும் கலந்து அதனையும் கடந்து தாமாக விளங்கும் விளக்கப் பொருளாகி நிற்கும் மெய்யுணர்வு மெய்மம் எனப்பெறும் உண்மை நிலையாகும்.
இவ்வுண்மையானது பரத்துவ நிலையில் அகப் பொருளாகத் தோன்றியும் உலகியல் நிலையில் (தளை) அகத்தே தோன்றாமையுமாகி இயங்கும் தன்மையே இறைநிலையாகும். இவ்விறைமை நிலையே தோன்றா நிலையில் ஆற்றலாக உள்ள இயக்க ஊற்றாகும்.
இந்நிலைகளை புலன் கடந்த மெய்யறிவுத் தன்மையால் பக்குவம் பெற்ற பெற்றியர்கள் அல்லது மெய்யுணர்வாளர்கள் உணர்வதன்றி மதம் - அறிவு அதாவது உணர்வு அறிவு இவ்விரு கூறுகளின் தனித் தனி முறைகளால் உணர முயல்பவர்களால் உணர வியலாது. அறிவும் உணர்வும் தகு நிலையோடு கலந்தியங்கும் மெய்யுணர்வே கடவுள் நிலையாகும்.
இது ஒன்றே மாந்த வாழ்வின் அடிப்படை நெறியாகும். அனைத்திலும் இது உணரப் பெறும் போது வாழ்வு எனப் படும் உலகியல் தன்மை மாந்த நிலையில் இல்லாமல் போகும். இதுவே முதிர் நிலை என்பதாகக் கூறுவதே உணர்த்துவதே பெற்றியர் சமய மெய்மமாகும். இதுவே வாழ்வு எனும் முதிர் நிலையாகும்.
ஆகவே உண்டு என்று கூறுவோர் உள்ளத்தால் இல்லை என்றாக்குவதும் இல்லை எனக் கூறுவோர் தங்களை அறியாமலேயே உள்ளத்தால் உண்டு என்று ஆக்குவதும் வெளிப்படையாகிறது. உண்மையான மெய்யுணர்வாளர்களே உண்டு இல்லை எனும் தன்மையை உணர்த்துவதுடன் உண்டு இல்லை என்னும் உலகியல் நிலையில் கலந்து நிற்கும் மெய்யுணர்வே கடவுள் நிலை என்பது இதனாற் பெறப்படும் மெய்மமகும்.
முற்றும்

நண்பர்களே! மெய்விளம்பி எனும் ஒரு வலைப்பூ புதிதாகப் பூத்துள்ளது. இந்த வலைப்பூ மறைக்கப்பட்ட தமிழர் நியாயங்களையும் களையெடுக்கப்பட வேண்டிய துரோக முகங்களையும் வெளிக்கொணரவே பூத்துள்ளது.

நீங்களும் இந்த உண்மைகளை மெய்விளம்பி மூலம் அறிந்து கொள்ளுங்கள்.


ஈழ நிலவரங்கள் பற்றிய உண்மை செய்திகளை அறிய இந்த வலைப்பூவினைக் காண்க.