விடுதலை உணர்வும் வேட்கையும் கொண்ட மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே. எமது இனம் பாவப்பட்டவர்களாய் பரிதாவப்பட்டவர்களாய் பாதுகாப்பில்லாதவர்களாய் அனாதைகளாய் அகதிகளாய் அடிமைகளாய் சிறீ லங்கா பயங்கரவாத இனவெறி அரசால் சிதறடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் தடுப்புமுகாம் என்று ஐனா அதிகாரிகளே வர்ணிக்கக்கூடிய மின்சாரம் பாட்சப்படுகின்ற முட்கம்பி வேலிக்கு நடுவில் எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வதைகொள்ளப்படுகிறார்கள். அம் மக்களை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பணியும் புலம்பெயர் மக்களாகிய எம்மிடிம் தான் விடப்பட்டுள்ளது. வீரம் செறிந்த எமது விடுதலைப்போராட்டம் சந்தித்துள்ள இப் பின்னடைவானது தற்காலிகமானதே தவிர நிரந்தரமாகாது. கசப்புகளுக்கும் வெறுப்புக்களுக்கும் சோர்வுணர்வுகளுக்கும் அப்பாட் சென்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்களும் மக்களும் உதிரம் சிந்நி உரமேற்றிய விடுதலைப்பாதையை நாம் அனைவரும் அணி திரண்டு வருகின்ற தடைகளையெல்லாம்; உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்த்தவேண்டும். இன்று சிங்கள அரசாங்கமும் எமது எதிரிகளும் கண்டு பயப்படும் மாபெரும் புரட்சி கொண்ட மக்கள் சக்தியாக எமது தலைவன் எம்மை உருவாக்கியிருக்கிறார். ஆகவே எமது நேசத்துக்குரிய மக்களே மே 18 ஆம் திகதிக்கு முன் இருந்த எழுச்சியை விட தற்பொழுது தான் நாம் மிகவும் எழுச்சியாக இருக்க வேண்டும். மாற்றம் அடைந்துவரும் வெளிநாடுகளின் தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை எமது கனதியான போராட்டங்கள் மூலம் வலுவடையச்செய்தல் வேண்டும். இன்றைய காலகட்டம் என்பது புதிதாக போராட்டத்தில் தம்மை இணைத்துள்ள உலகெங்கும் வாழ் தமிழ் இளையோர்களுக்கு ஒரு சவாள் நிறைந்த காலகட்டம். வெளிநாட்டவர்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற சமபொளுதில் தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதென்பதே அச் சவாள் ஆகும். இச் சாவள்களையெல்லாம் முறியடித்து இளையோர்களும் முதியோர்களுமாக சர்வ உலகமும் அதிரும் வண்ணம் கேளத சர்வதேசத்தின் காதுகள் கேட்கும்வரைக்கும் விடுதலைக்கான கொட்டொலிகளை ஓங்கி எழுப்ப வேண்டும். இன்றை இந்ந சுடுகாட்டு அமைதிக்கு ஒப்பான காலகட்டத்தை மீறி நாம் முன்னெடுக்கப்போகின்ற போராட்டங்களே தமிழனின் இருப்பை தீர்மாணிக்கப் போகின்றன அவையே அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் காலத்தை வேகமாக்கப் போகின்றன. மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வெகுசனப் போராட்டங்கள் கண்டங்கள் கடந்து பற்றியெரியும் போதே சங்கர் தொட்டு முள்ளிவாய்க்கால் வரைக்கும் மடிந்தவர்களின் ஏக்கங்கள் தணியும். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் எழுச்சிப்பிரகடண காலகட்டத்தில் சுவிஸ் தமிழர் பேரவையால் வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் அழைக்கிறார்கள்.
|
வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கை
| |
No comments:
Post a Comment